இந்திய தொழிலாளர்கள் வாரத்தில் எத்தனை மணிநேரம் வேலை செய்கிறார்கள்? புள்ளி விவரம் கூறுவது என்ன...
- உலகின் டாப் 10 பொருளாதார நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது.
- உலகின் டாப் இடத்தில் வர வேண்டுமேன்றால், வாரத்திற்கு நீங்கள் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்தியாவில் ஒரு தொழிலாளி சராசரியாக ஒவ்வொரு வாரமும் 46.7 மணி நேரம் வேலை செய்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் உலகின் டாப் 10 பொருளாதார நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. சீனா 46.1 மணி நேரம், பிரேசில் 39 மணி நேரம், அமெரிக்கா 38 மணி நேரம், ஜப்பான் 36.6 மணி நேரம் வேலை செய்வதாக தெரியவந்துள்ளது.
முன்னதாக, L&T சேர்மன் எஸ்.என். சுப்ரமணியன் "உங்களை (பயணியாளர்கள்) ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைப்பார்க்க வைக்க என்னால் முடியவில்லை என்று வருத்தப்படுகிறேன். என்னால் ஞாயிற்றுக்கிழமை உங்களை வேலைப்பார்க்க வைக்க முடியும் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால், நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைப் பார்க்கிறேன்.
ஞாயிற்றுக்கிழமை பணியாளர்கள் வீட்டில் இருப்பதால் என்ன லாபம் அடைந்தார்கள்?. வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். உங்களுடைய மனைவியை எவ்வளவு நேரம் வெறித்து பார்க்க முடியும். எவ்வளவு நேரம் மனைவி கணவனின் முகத்தை வெறித்து பார்க்க முடியும்? அலுவலகம் சென்று வேலையை தொடங்குங்கள்.
சீன மக்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலைப் பார்க்கிறார்கள். அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணி நேரம் மட்டுமே வேலைப் பார்க்கிறார்கள். உலகின் டாப் இடத்தில் வர வேண்டுமேன்றால், வாரத்திற்கு நீங்கள் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது கருத்துக்கு, தொழிலாளர்கள் 40 மணி நேரம் வேலை செய்தே சுப்பிரமணியத்தின் வருட சம்பளம் 51 கோடி. முந்தைய வருடத்தை விட 43 சதவீத உயர்வு. தான் மேலும் லாபமடைய தொழிலாளர்கள் 90 மணி நேரம் உழையுங்கள் என்கிறார் என்று பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.