செய்திகள்
பதவியேற்பு விழா: அ.தி.மு.க. புறக்கணிப்பு
புதுவை மாநிலத்தின் புதிய முதல்அமைச்சரான நாராயணசாமி தலைமையில் இன்று அமைச்சரவை பதவியேற்பு விழா நடந்தது. இந்த விழாவை அதிமுக புறக்கணித்தது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தின் புதிய முதல்அமைச்சரான நாராயணசாமி தலைமையில் இன்று அமைச்சரவை பதவியேற்பு விழா நடந்தது.
இந்த விழாவை அதிமுக புறக்கணித்தது. புதுவை சட்டமன்றத்திற்கு 4 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் மாநில செயலாளருக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், 4 எம்.எல்.ஏ.க்கள், மாநில செயலாளர் என அ.தி.மு.க.வினர் யாரும் விழாவில் பங்கேற்க வில்லை.