செய்திகள்
கூலிப்படையை வேரறுக்க தீவிர நடவடிக்கை தேவை - தலையங்கம்
ஒரு லட்சம், இரண்டு லட்சம் பணத்துக்காக மனிதனை மனிதனே தீர்த்துக் கட்டும் மோசமான சூழ்நிலை தடுக்கப்பட வேண்டும்.
சென்னை:
ஆட்டுக்கறி சாப்பிட ஆசை! ஆனால் ஆட்டை கொல்ல கை நடுங்கும்! கசாப்பு தொழில் செய்பவர்களிடம் காசு கொடுத்துதான் ஆட்டை அறுத்து வாங்கும் காலம் இருந்தது.
ஆனால் இன்று ஆடு, கோழிகளை கொல்வதை போல் காசுக்காக மனிதனை கொலை செய்யும் கொலைக்கூட்டம் அதிகரித்து இருக்கிறது.
கூலிப்படை என்ற கவுரவ பெயருடன் வலம் வரும் இவர்களுக்கு கொலை செய்வது பொழுது போக்கு மாதிரி ஆகிவிட்டது.
எவரை கொலை செய்ய வேண்டுமோ அவரை அடையாளம் காட்டிவிட்டு கூலியை பேசிவிட்டால் போதும் கதையை கச்சிதமாக முடித்து விடுவார்கள்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை - கலப்பு திருமணம் செய்த காதல் ஜோடி கொலை-கொடுக்கல் வாங்கலில் தொழிலதிபர் கொலை என்று தினம், தினம் பலர் தீர்த்துக் கட்டப்படும் தகவல்களை அறிகிறோம்.
இதில் எல்லா வழக்குகளிலும் கூலிப்படை சம்பந்தப்பட்டு இருப்பதையும் அறிகிறோம்.
உடுமலையில் சங்கர் என்ற வாலிபரை நடுரோட்டில் சும்மா சர்வசாதாரணமாக வெட்டி போட்டுவிட்டு சென்றதை சினிமா காட்சி பார்ப்பதைபோல் பார்த்தோம்.
சென்னை கோடம்பாக்கத்தில் ஐகோர்ட்டு வக்கீலையும் பட்டப்பகலில் கொலை செய்து விட்டு சென்றதை பார்த்து பொது மக்கள் அதிர்ந்தனர். சாம்பிளுக்காகத்தான் இந்த இரண்டு சம்பவங்களும். இப்படி கூலிப்படைகளால் நூற்றுக்கணக்கான பேரின் கதை முடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கூலிப்படைகளின் கதை முடியவில்லை. அந்த கூட்டத்தில் புதிது புதிதாக பலர் சேருகிறார்கள்.
கொலை குற்றத்துக்கு சட்டத்தில் கடும் தண்டனை இருக்கிறது. அப்படி இருந்தும் போலீஸ், தண்டனை எதைப் பற்றியும் கவலை இல்லாமல் கூலிக்காக கொலை செய்ய எப்படி தைரியம் வருகிறது?
கூலிப்படையினர் பலர் அடையாளம் தெரிவதில்லை. ஒரு சிலர் மட்டுமே போலீஸ் பிடியில் சிக்குகிறார்கள்.
அவ்வாறு பிடிபடுபவர்களும் மிக எளிதாக ஜாமீனில் வெளியே வந்துவிடுகிறார்கள். தப்பிக்க வழி இருப்பதால் மீண்டும், மீண்டும் தைரியமாக கொலை செய்கிறார்கள்.
கிட்டத்தட்ட இதுவும் ஒரு தீவிரவாதம் போல்தான். பிரச்சினைகள் இல்லாத மனிதர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். என்ன பிரச்சினைக்கு யார் என்ன செய்வார்களோ... என்று சாதாரண மக்கள் பயந்து பயந்தே வெளியே நடமாடும் சூழ்நிலைதான் உருவாகி வருகிறது.
எனவே கூலிக்காக கொலை செய்யும் எண்ணம் வேரறுக்கப்பட வேண்டும். கூலிப்படையினர் ஒழிக்கப்பட வேண்டும்.
ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் மீண்டும் இன்னொரு வழக்கில் சம்பந்தப்பட்டு வரும்போது இரு வழக்குகளையும் இணைத்து பார்ப்பதில்லை.
அப்போதைய வழக்கின் தன்மைக்கேற்ப சட்டத்தின் மூலம் வெளியே வந்துவிடுகிறார்கள்.
இவர்களை ஒழிக்க வேண்டுமென்றால் ஒன்றுக்கு மேற்பட்ட கொலை வழக்குகளில் சிக்குபவர்கள் சமூகத்துக்கு தேவையானவர்களா? என்று யோசிக்க வேண்டும்.
அப்படிப்பட்டவர்களை விசாரிக்க தனி விசாரணை அமைப்பு உருவாக்கலாம். தேவைப்பட்டால் சட்ட திருத்தம் கொண்டு வந்து கடும் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் கூலிப்படைக்கு குளிர்விட்டுப் போகும்.
ஒரு லட்சம், இரண்டு லட்சம் பணத்துக்காக மனிதனை மனிதனே தீர்த்துக் கட்டும் இந்த மோசமான சூழ்நிலை தடுக்கப்பட வேண்டும்.
இல்லாவிட்டால் கொலைக்குற்றத்துக்கு கடும் தண்டனை உண்டு. அதற்கு கடுமையான சட்டப்பிரிவுகள் இருக்கிறது என்பதெல்லாம் வேடிக்கையாகி விடும்.