செய்திகள்

மஞ்சூர் அருகே பசு மாட்டை கொன்று சிறுத்தைப்புலி அட்டகாசம்

Published On 2016-06-07 18:31 IST   |   Update On 2016-06-07 18:31:00 IST
மஞ்சூர் அருகே மேய்ச்சலுக்கு விட்டுச் சென்ற பசு மாட்டை அடித்துக்கொன்ற சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஞ்சூர்:

மஞ்சூர் அருகே உள்ள குந்தா பாலம், தங்காடு பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. தங்காடுவை சேர்ந்தவர் நாகராஜ். கூலி தொழிலாளி. இவர் மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 3 வயதுடைய பசு மாட்டை நேற்று காலை குந்தா ஆற்றுப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த சிறுத்தைப்புலி ஒன்று பசுமாட்டை அடித்துக்கொன்றது. இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வனக்காப்பாளர் ராமச்சந்திரன், கால்நடை டாக்டர் கார்த்திகேயன் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். தொடர்ந்து கால்நடை டாக்டர் இறந்த மாட்டை பரிசோதனை செய்தார்.

அப்போது சிறுத்தைப்புலி அடித்துக்கொன்றது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து பசு மாட்டின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் சிறுத்தைப்புலி அட்டகாசம் செய்து வருவதால், அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News