செய்திகள்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை - மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2016-06-07 21:31 IST   |   Update On 2016-06-07 21:31:00 IST
சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், ஆங்காங்கே மரங்கள் சாலையில் விழுந்து போக்குரவத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
சென்னை:

சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், அண்ணாநகர், கே.கே.நகர்.ராமாபுரம், தி.நகர், வடபழனி, தேனாம்பேட்டை, சென்னை அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருமங்கலம், கொரட்டூர் ஆகிய இடங்களில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இந்த கனமழையால் சென்னை வேப்பேரியில் அமைத்திருக்கும் போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் முன்பு இருந்த பெரிய மரம் ஒன்று சாலையில் சாய்ந்ததால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மீட்பு படையினர் மற்றும் போலீசார் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.

Similar News