செய்திகள்

சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்

Published On 2016-07-23 08:38 IST   |   Update On 2016-07-23 08:38:00 IST
சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் தாக்கப்பட்டதற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிறையில் இருந்து விடுதலையான சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், சிறையில் தன்னை 30 காவலர்கள் சூழ்ந்துகொண்டு கண்மூடித்தனமாக அடித்துத் துன்புறுத்தியதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.

பாதுகாப்பான இடம் என்று கருதப்படும் சிறைச்சாலையில் காவலர்கள் சூழ்ந்து கொண்டு அவரை குண்டாந்தடியால் ரத்தம் சொட்டச்சொட்ட அடித்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பொதுப் பிரச்சினைகளுக்காகப் போராடிய சமூக ஆர்வலரை சிறையில் மிருகத்தனமாக தாக்கிய காவலர்களை பணி இடைநீக்கம் செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்காக நியாயமான முறையில் குரல் கொடுத்து வரும் பியூஷ் மனுஷ் மீது காவல்துறையினர் தொடுத்துள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்.

காவல்துறையினரின் இதுபோன்ற அத்துமீறல்களை இனியும் அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News