செய்திகள்

தே.மு.தி.க பொறுப்பாளர் நியமனம்: விஜயகாந்த் அறிவிப்பு

Published On 2016-07-23 11:14 IST   |   Update On 2016-07-23 11:14:00 IST
தேசிய முற்போக்கு திராவிட கழகம் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் இராதாபுரம் ஒன்றிய கழக பொறுப்பாளர் நியமனம் குறித்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்
சென்னை:

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேசிய முற்போக்கு திராவிட கழகம் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் இராதாபுரம் ஒன்றிய கழக பொறுப்பாளராக ஆல்வின்ராஜாவிட், இன்று முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு திருநெல்வேலி கிழக்கு ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து கழகம் சிறப்பான வளர்ச்சி பெற பாடுபட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

ஏற்கனவே திருநெல்வேலி கிழக்கு மாவட்ட இராதாபுரம் ஒன்றய கழக செயலாளர் கண்ணன், வகித்து வந்த பொறுப்பிலிருந்து இன்று முதல் நீக்கப்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News