செய்திகள்
அம்பத்தூரில் தொழில் அதிபரை காரில் கடத்தி பணம் பறிப்பு: போலீசார் விசாரணை
அம்பத்தூரில் தொழில் அதிபரை காரில் கடத்தி பண பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லிவாக்கம்:
வேப்பேரி ஈ.வெ.ரா சாலையை சேர்ந்தவர் மேத்யூ (64) இவர் அம்பத்தூரை அடுத்து உள்ள அயப்பாக்கம், அத்திப்பட்டு போன்ற இடங்களில் கடை, வீடு கட்டி வாடகைக்கு விட்டு உள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
நேற்றுமாலை வாடகையை வசூல் செய்வதற்காக காரில் அத்திப்பட்டுக்கு சென்றார். காரை அவரே ஓட்டினார். கார் அத்திப்பட்டு அருகே சென்ற போது மற்றொரு கார், மேத்யூ காரை வழிமறித்தது. பின்னர் அந்த காரில் இருந்து இறங்கிய 4 பேர் மேத்யூவை தங்களது காரில் கடத்தி சென்றனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து அம்பத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் காரின் நம்பரை வைத்து விசாரணை நடத்தி அவரை மீட்க முயன்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு மேத்யூ அம்பத்தூர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவர் காரில் கடத்திய கும்பல் என்னிடம் ரூ. 5 ஆயிரத்தை பறித்து கொண்டு ஸ்ரீபெரும்புத்தூர் அருகே விட்டு சென்றனர் என கூறினார்.
மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் தாம்பரத்தை சேர்ந்த தாமஸ், பிரபு ஆகிய 2 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேத்யூ தொழில் பிரச்சனை காரணமாக கடத்தப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எனவும் விசாரித்து வருகிறார்கள்.