செய்திகள்

ஜமுனாமரத்தூர் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து தலைமை ஆசிரியர் காயம்

Published On 2016-07-23 15:46 IST   |   Update On 2016-07-23 15:46:00 IST
ஜமுனாமரத்தூர் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து தலைமை ஆசிரியர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரபை ஏற்படுத்தி உள்ளது

போளூர்:

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஒன்றியம் ஜமுனாமரத்தூர் அருகே உள்ள காந்திநகரில் வசிப்பவர் முனிரத்தினம் (வயது56). கல்யாண மந்தை கிராமத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.

இவர், சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதற்காக வாணியம் பாடிக்குச் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். காவனூர் விண்வெளி ஆராய்ச்சி மையம் அருகே சென்றபோது முனிரத்தினத்தின் தொண்டை பகுதியில் நாட்டுத் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்தார்.

பின்னர் அவர் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீ சார் கூறுகையில், காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக இந்தப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுடும்போது குறிதவறி தலைமை ஆசிரியர் மீது பாய்ந்து இருக்கலாம் என்றனர்.

Similar News