செய்திகள்
ஜெயங்கொண்டத்தில் பைக் திருடன் கைது: போலீசார் விசாரணை
ஜெயங்கொண்டத்தில் பைக் திருடிய மர்மநபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து, இவரது மகன் தனவேல் (வயது 55). இவர் அதேபகுதி மேட்டுத்தெருவில் உள்ள தனது நண்பர் ரவிச்சந்திரன் வீட்டிற்கு சென்று ரவிச்சந்திரனிடம் பேசிவிட்டு வெளியே வந்தார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் தனவேலின் மோட்டார் சைக்கிளை போலி சாவி மூலம் திறந்து எடுத்துச் செல்ல முற்பட்டார். இதை பார்த்த தனவேல், ரவிச்சந்திரன் இருவரும் ஓடிவந்து மர்மநபரை பிடித்து ஜெயங்கொண்டம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அந்த மர்மநபரிடம் விசாரணை செய்ததில் இலையூர் மேலவெளியைச் சேர்ந்த சிவசாமி மகன் நீலமேகம் (37) என்பது தெரியவந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் வேலுசாமி வழக்கு பதிந்து நீலமேகத்தை கைது செய்து விசாரித்து வருகின்றார்.