செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 13 மாணவ–மாணவிகள் குழந்தைகள் காப்பகத்துக்கு மாற்றம்,கலெக்டர் நடவடிக்கை

Published On 2016-07-23 18:23 IST   |   Update On 2016-07-23 18:23:00 IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதகரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்:

பட்டுக்கோட்டை வளவன்புரத்தில் அன்னை தெரசா கருணை இல்லம் உள்ளது. இந்த இல்லத்தை மதுக்கூர் சிவக்கொல்லையை சேர்ந்த போதகர் ராஜா டேவிட் (வயது47) நடத்தி வந்தார்.

இவர் இல்லத்தில் உள்ள 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து அந்த சிறுமியின் தந்தை பட்டுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில் போதகர் ராஜா டேவிட் மேலும் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் உத்தரவின் பேரில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி சரஸ்வதி, அலுவலர்கள் அசோக், ரஞ்சித் மற்றும் பட்டுக்கோட்டை தாசில்தார் குருமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார் ஆகியோர் கருணை இல்லத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 11 மாணவிகள், 2 மாணவர்கள் இருந்தனர். மேலும் கருணை இல்லம் அனுமதி பெறாமல் நடத்தியதும் தெரிய வந்தது.

இதையடுத்து கருணை இல்லத்தில் இருந்த குழந்தைகள் தஞ்சையில் உள்ள குழந்தைகள் நலக்குழுவில் ஆஜர்படுத்தப்பட்டு அரசு குழந்தைகள் காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.

Similar News