செய்திகள்
தமிழகம் முழுவதும் 44 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம் - சென்னையில் புதிய உதவி கமிஷனர்கள் நியமனம்
தமிழகம் முழுவதும் 44 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றப்பட்டனர். சென்னையில் உதவி கமிஷனர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி. அசோக்குமார் நேற்று பிறப்பித்தார்.
சென்னை:

இது தொடர்பான விவரம் வருமாறு:-
சென்னை எம்.கே.பி.நகர் உதவி கமிஷனராக ஜெயசிங் பொறுப்பு ஏற்கிறார். நவநீதகிருஷ்ணன் கோயம்பேட்டுக்கும், ஜெகதீசன் சென்னை தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவிற்கும், எஸ்.விஜயகுமார் மீனம்பாக்கம் உதவி கமிஷனராகவும், நடேசன் சென்னை உளவுப்பிரிவிற்கும், அரிக்குமார் அசோக் நகருக்கும், ராஜசேகரன் சென்னை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவிற்கும், மோகன்தாஸ் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும், சிவபாஸ்கர் கீழ்ப்பாக்கத்திற்கும் புதிய உதவி கமிஷனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுந்தரம் சென்னை சென்டிரல் ரெயில் நிலைய துணை சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார். புகழேந்தி சென்னை குற்ற ஆவண காப்பகத்திற்கும், லோகநாதன் தாம்பரம் உதவி கமிஷனராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மதியழகன், மணியழகன் ஆகியோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
பாலசுப்பிரமணியன் பட்டாபிராம் உதவி கமிஷனராக பொறுப்பு ஏற்கிறார். ராஜகாளியப்பன் சென்னை உளவுப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். தொல்காப்பியன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும், ஆரோக்கிய பிரகாசம் மத்திய குற்றப்பிரிவிற்கும் உதவி கமிஷனர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
குப்புசாமி சென்னை எழும்பூர் உதவி கமிஷனராக பதவி ஏற்கிறார். சென்னையில் பணியாற்றிய கலிதீர்த்தான், மன்னர்மன்னன், தங்கராஜூ, ராமலிங்கம் உள்ளிட்ட சிலர் வெளி ஊர்களுக்கு துணை சூப்பிரண்டுகளாக மாற்றப்பட்டுள்ளனர். தங்கராஜூ காஞ்சீபுரம் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உதவி கமிஷனர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் 44 துணை போலீஸ் சூப்பிரண்டுகளை மாற்றி டி.ஜி.பி. அசோக்குமார் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.