செய்திகள்

கொடைக்கானலில் தொடர்ந்து மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2016-07-26 11:12 IST   |   Update On 2016-07-26 11:12:00 IST
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையினால் ஏரிகளுக்கு நீர்வரத்து அகரித்துள்ளது.

கொடைக்கானல்:

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் பெய்து வரும் மழையினால் அங்குள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நட்சத்திர ஏரி, பேரிஜம் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் தற்போது அதிக அளவு தண்ணீர் உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கி உள்ளது.

மேலும் தடுப்பணைகளும் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக விவசாய சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. தற்போது மலைப்பகுதியில் பூண்டு, உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட் போன்றவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்யும் மழையினால் நல்ல மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கொடைக்கானலில் நேற்று மதியம் முதல் நள்ளிரவு வரை விட்டு விட்டு மிதமான அளவில் மழை பெய்தது. மேல்மலை பகுதிகளான மன்னவனூர், கவுஞ்சி, பூம்பாறை, புத்தூர், கூக்கால். கூம்பூர், பூண்டி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.

திண்டுக்கல் மற்றும் மாவட்டத்தில் உள்ள நத்தம், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட இடங்களிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் புற்கள் முளைத்துள்ளது. இதனால் கால்நடைகளுக்கு தீவண தட்டுப்பாடு நீங்கி உள்ளது.

Similar News