செய்திகள்

அம்பத்தூரில் மெடிக்கல் கடை உரிமையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2016-07-26 12:02 IST   |   Update On 2016-07-26 12:02:00 IST
அம்பத்தூரில் மெடிக்கல் கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லிவாக்கம்:

அம்பத்தூர் ஒரகடம் விநாயகபுரத்தை சேர்ந்தவர் முத்து கருப்பன். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர் அதே பகுதியில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார்.

இவர் நேற்று மாலை அங்குள்ள பேங்கிற்கு சென்று தான் அடமானம் வைத்த 5 பவுன் நகையை மீட்டார். இதை அங்கு நின்று கொண்டு இருந்த 2 மர்ம நபர்கள் நோட்டமிட்டனர். பின்னர் சுப்புலட்சுமி வீடு திரும்பினார்.

வீட்டின் டி.வி. மேலே நகைபையை வைத்து விட்டு மற்றொரு அறைக்கு சென்று உடை மாற்றினார். திரும்பி வந்து பார்த்த போது நகை பை, மற்றும் அவரது செல்போன், ரூ.10 ஆயிரம் ஆகியவை மாயமாகி இருந்தது.

இது குறித்து அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மேலும் சுப்புலட்சுமியின் எதிர் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமிராவை சோதனை செய்தனர். அதில் சுப்புலட்சுமியை பேங்கில் நோட்டமிட்ட 2 மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்து வந்து வீட்டிற்குள் சென்று நகை-பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News