செய்திகள்
புழல் அருகே பெண்ணை தாக்கி நகை கொள்ளை
புழல் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் உருட்டு கட்டையால் பெண்ணை தாக்கி நகை கொள்ளையடித்து சென்றனர்
செங்குன்றம்:
சென்னையில் பெண்ணை தாக்கி நகைபறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றது.
புழல் விநாயகபுரம் கே.வி.ஆர்.நகரை சேர்ந்தவர் ஹேமா (64). இவர் நேற்று இரவு பொருட்கள் வாங்க வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கும் நடந்து சென்றார்.
அப்போது 2 மர்ம நபர்கள் கையில் உருட்டு கட்டையுடன் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் திடீரென உருட்டு கட்டையால் ஹேமாவின் தலையில் பலமாக தாக்கினர்.
அவர் ரத்த வெள்ளத்தில் அலறியபடி மயங்கி கீழே விழுந்தார். பின்னர் மர்ம நபர்கள் ஹேமா கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
அக்கம் பக்கத்தினர் ஹேமாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து புழல் போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.