செய்திகள்
பார்க் டவுன் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 6½ பவுன் நகை கொள்ளை
வீட்டின் பூட்டை உடைத்து 6½ பவுன் நகையினை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
மதுரை:
மதுரை பார்க் டவுன் பகுதியை சேர்ந்தவர் பால கிருஷ்ணன், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ஆனந்தபிரியா. இவர் கடந்த 22–ந்தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
நேற்று வீடு திரும்பிய அவர், கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது அவர்கள் விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது பீரோவும் திறந்து கிடந்தது.
அதில் இருந்த 6½ பவுன் நகை கொள்ளை போய் இருப்பதாக ஆனந்தபிரியா தெரிவித்தார். இதன் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.