முசிறியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
முசிறி:
முசிறி அருகே வேளகாநத்தம் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் தன்ராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நல்லுசாமி, மாவட்ட செயற்குழு ராமநாதன், ஒன்றிய செயற்குழு கிருஷ்ணன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர். ராக்கம்பட்டி கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடை அமைக்க வேண்டும், மேற்குராக்கம்பட்டி, கிழக்குராக்கம்பட்டி மற்றும் முத்தையநல்லூர் மக்களுக்கு மயானசாலை அமைத்து தர வேண்டும், நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு ரூபாய் 203 கூலி வழங்க வேண்டும், தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவித்தொகை வழங்க வேண்டும், ராக்கம்பட்டி ஏரியை தூர்வார வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் உறுப்பினர் கதிர்வேல் நன்றி கூறினார்.