செய்திகள்

திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதித்தவர்களுக்கு தமிழிசை ஆறுதல்

Published On 2016-08-28 18:03 IST   |   Update On 2016-08-28 18:03:00 IST
திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதித்தவர்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னை:

திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை இன்று காலை பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த அவர் டாக்டர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் கூறுகையில் டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சை நன்றாக உள்ளது. காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Similar News