செய்திகள்
காஞ்சீபுரத்தில் மது குடித்தபோது மோதல்: தந்தையை குத்தி கொன்ற மகன்கள்
காஞ்சீபுரத்தில் மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் தந்தையை மகன்கள் குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த கிழம்பி பகுதியில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (வயது 50) எலக்ட்ரீசியன்.
இவரது மனைவி ஜெயந்தி. இவர்களது மகன்கள் வினோத்குமார், குமரன். இருவரும் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தனர்.
நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு கோவிந்தராஜ் வீட்டுக்கு வந்தார். பின்னர் 2 மகன்களுடன் அமர்ந்து மது அருந்தினார். அப்போது கோவிந்தராஜின் மனைவி மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் போதை தலைக்கேறிய வினோத் குமாரும், குமரனும் செலவுக்கு பணம் கேட்டு கோவிந்தராஜிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் தந்தை - மகன்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த வினோத்குமாரும், குமரனும் தந்தை கோவிந்தராஜை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை கத்தியால் குத்தினர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கோவிந்தராஜ் வீட்டுக்கு வெளியே கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.
தந்தை இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வினோத்குமாரும், குமரனும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த ஜெயந்தி வீட்டின் வெளியே வந்து பார்த்த போது கணவர் கோவிந்தராஜ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதார்.
இது குறித்து பாலு செட்டிசத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியில் பதுங்கி இருந்த குமரனை போலீசார் கைது செய்தனர். வினோத்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொலையுண்ட கோவிந்தராஜின் சொந்த ஊர் புதுக்கோட்டை ஆகும். அவர் குடும்பத்துடன் கிழம்பி பகுதியில் தங்கி எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார்.
மகன்கள் வேலைக்கு செல்லாததால் கோவிந்தராஜ் மிகவும் கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்தினார். குடிப்பழக்கத்தால் மகன்களாலேயே அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.