செய்திகள்

ஆதிசே‌ஷனை மீண்டும் நியமிக்க வேண்டும்: சபாநாயகரிடம் தி.மு.க. மனு

Published On 2016-09-06 14:21 IST   |   Update On 2016-09-06 14:21:00 IST
மு.க.ஸ்டாலின் சிறப்பு நேர்முக உதவியாளராக ஆதிசே‌ஷனை மீண்டும் நியமிக்க வலியுறுத்தி சபாநாயகர் தனபாலிடம் தி.மு.க.வினர் மனு அளித்துள்ளனர்.
சென்னை:

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பு நேர்முக உதவியாளராக ஆதிசே‌ஷன் நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த மாதம் போட்டி சட்டசபை கூட்டம் நடந்த போது ஆதிசே‌ஷன் அங்கு நின்றதாக கூறி அவரை உதவியாளர் பதவியில் இருந்து அரசு நீக்கியது.

இந்த நிலையில் இன்று சட்டமன்ற தி.மு.க. கொறடா சக்கரபாணி, எ.வ.வேலு எம்.எல்.ஏ. ஆகியோர் சபா நாயகர் தனபாலை சந்தித்து ஒரு கடிதம் கொடுத்தனர். அதில், ‘விதிகளை புறம்தள்ளி விட்டு ஆதிசே‌ஷனை தகுதி இறக்கம் செய்துள்ளது தவறு என்றும் அவரை மு.க.ஸ்டாலினின் சிறப்பு நேர்முக உதவியாளராக மீண்டும் நியமிக்க வேண்டும் என்றும்’ கூறியுள்ளனர்.

Similar News