செய்திகள்
தங்கச்சிமடம் அருகே கடற்கரையில் ஆண் பிணம்: போலீசார் விசாரணை
தங்கச்சிமடம் அருகே கடற்கரையில் ஒரு ஆண் பிணம் கரை ஒதுங்கியது. அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் கண்ணுப்பாடு கடற்கரையில் ஒரு ஆண் பிணம் ஒதுங்கியது. இது குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில் தங்கச்சி மடம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என விசாரணை நடந்து வருகிறது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு தேவிபட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் 3 பேர் கடலில் சென்றபோது படகு பழுதாகி மூழ்கியது. இதில் உயிருக்கு போராடிய 2 பேர் மீட்கப்பட்டனர். படகில் பயணம் செய்த அப்பாவு என்ற மீனவர் குறித்து எந்த தகவலும் இல்லை. எனவே கரையில் பிணமாக ஒதுங்கியவர் மாயமான மீனவரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.