செய்திகள்

தாம்பரத்தில் வங்கியை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் 300 பேர் கைது

Published On 2016-11-21 15:30 IST   |   Update On 2016-11-21 15:30:00 IST
ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். மத்திய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து தாம்பரத்தில் உள்ள வங்கியை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம்:

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். பொதுமக்களின் சிரமத்தை போக்கவும், மத்திய அரசை கண்டித்தும் காங்கிரசார் இன்று வங்கிகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி முன்பு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தலைவர் சிவராமன் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலந்தூர் மண்டல காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், வங்கிகளில் பொதுமக்களின் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வங்கியை முற்றுகையிட போலீசார் தடுப்பை தாண்டி செல்ல முயன்றனர். இதையடுத்து சிவராமன் உள்பட 300 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அருகில் உள்ள  தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Similar News