செய்திகள்
சிவகங்கையில் கல்லூரி மாணவி நள்ளிரவில் மாயம்: போலீசார் விசாரணை
சிவகங்கையில் வீட்டில் இருந்த மாணவி நள்ளிரவில் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சிவகங்கை:
சிவகங்கை நகரில் உள்ள மதுரை ரோட்டை சேர்ந்த 17 வயதுடைய பெண் சருகணியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு இந்த மாணவி வழக்கம்போல் வீட்டில் தூங்கினார்.
நள்ளிரவு 2 மணி அளவில் மாணவி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாணவியின் தாய் சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து மாணவி தானாகவே எங்கேனும் என்றாரா? அல்லது யாராவது கடத்தி சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.