துடியலூரில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
கவுண்டம்பாளையம்:
கோவை துடியலூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் அந்தோணி குணசேகர். இவரது மனைவி மார்க்ரெட் புளோரா.
இவர்களது மகள் ஜாஸ் மின் பிரஷீபா(வயது 26) திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் கடந்த 15-ந் தேதி செமஸ்டர் விடுமுறையில் வீட்டுக்கு வந்தார். நேற்று காலை அந்தோணி குணசேகரும், மார்க்ரெட் புளோராவும் ஆலயத்திற்கு சென்றனர். ஜாஸ்மின் பிரஷீபா மட்டும் வீட்டில் இருந்தார்.
சிறிது நேரம் கழித்து அந்தோணி குணசேகரும், மார்க்ரெட் புளோராவும் வீடு திரும்பிய போது முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதை கண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கதவை உடைத்து உள்ளே சென்ற போது ஜாஸ்மின் பிரஷீபா மின்விசிறியில் சுடிதார் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவஇடத்துக்கு போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.