செய்திகள்

நாசரேத் அருகே மாயமான இளம்பெண் மீட்பு

Published On 2016-11-21 17:38 IST   |   Update On 2016-11-21 17:38:00 IST
நாசரேத் அருகே மாயமான இளம்பெண் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
நாசரேத்:

நாசரேத் அருகே உள்ள பெத்தானியா நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் தீபா (வயது 17). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். வீட்டிற்கு வந்த இவர் கடந்த 3-ந்தேதி மருத்துவமனைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் மாயமானார்.

உறவினர் வீடுகளில் தேடியும் தீபா கிடைக்காததால் அவரது தாய் காளியம்மாள் நாசரேத் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுவாமிதாஸ் வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வக்குமார் விசாரணை நடத்தி மாயமான இளம்பெண்னை தேடிவந்தார்.

இந்த நிலையில் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்த தீபாவை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Similar News