செய்திகள்
பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலி
பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் நடுவலூரை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 40). விவசாயி. நேற்று இவர் சிறுவாச்சூரில் இருந்து நடுவலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
வேலூர் சாலையில் செல்லும் போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் வரதராஜன் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
பின்னர் அவரை மீட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வரதராஜன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெரம்பலூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.