செய்திகள்
கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டால் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த தமிழர்களின் போராட்டம்
சுமார் 25 லட்சம் மக்கள் பங்கேற்றும் ஒரு சிறு அசம்பாவித சம்பவத்துக்கு கூட இடமளிக்காமல் முற்றும் முழுக்க அறவழியின் அடிப்படையில் கடந்த 5 நாட்களாக நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தமிழர்களின் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளிலும் தாய்மார்கள், முதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என போராடி வருகின்றனர்.
மும்பை, டெல்லி, குஜராத் என நாட்டின் பிற மாநிலங்களிலும் விரிவடைந்த இந்த போராட்டம் தற்போது கடல் கடந்து உலகின் பிறநாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ரஷியா, சீனா, கனடா, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பலநாடுகளில் வாழும் தமிழர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்தியபடி, பெருந்திரளாக போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.
இதேபோல், மும்பை, டெல்லி, குஜராத் என நாட்டின் பிற மாநிலங்களிலும் விரிவடைந்த இந்த போராட்டம் தற்போது கடல் கடந்து உலகின் பிறநாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளது.

குறிப்பாக, அமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நியூயார்க், ஜார்ஜியா, வாஷிங்டன், நியூஜெர்சி, மிச்சிகன், மினசோட்டா, கனெக்டிகட், மேரிலாண்ட் உள்ளிட்ட மாகாணங்களில் பகுதிகளில் இந்தப் போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
அவ்வகையில், தெற்கு புளோரிடா பகுதியில் வாழும் தமிழர்கள் நேற்று தங்கள் குடும்பத்தாருடன் சாலையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற திரளான பெண்களில் சிலர் தங்களது கைக்குழந்தைகளுடன் சாலையில் அமர்ந்து ஜல்லிக்கட்டை ஆதரித்து முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில், ஜப்பான் நாட்டு தலைநகரான டோக்கியோவில் உள்ள பங்குசாய் உள்ளிட்ட நான்கு முக்கிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடைசெய்ய கோரியும் கையெழுத்து வேட்டை நடத்தி வருகின்றனர்.
இங்குள்ள நிஷி கசாய் பகுதியில் பிரமிட் பூங்கா, செய்ஷின்ச்சோவில் உள்ள ரியோகுச்சி பூங்கா, டொக்காய்ச்சிபா பகுதியில் உள்ள கயாபா பூங்கா, ட்சுகுபா பகுதியில் உள்ள டோஹோ பூங்கா, கவாசாகி நகரில் உள்ள ஃபியூஜிமி பூங்கா மற்றும் நகோயா பகுதியிலும் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை ஆதரித்தும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க கோரியும் இன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட பகுதிகளில் பெறப்படும் கையெழுத்து படிவங்கள் அனைத்தும் தலைநகர் டோக்கியோவில் உள்ள இந்திய தலைமை தூதரகத்தில் ஒப்படைக்கப்படும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
தடைசெய்யப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 17-ந் தேதி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரம் இளைஞர்களுடன் தொடங்கிய அறவழிப் போராட்டம் இன்று உலகமே வியந்து பார்க்கும் வகையில் விசுவரூபம் எடுத்துள்ளது.
தன்னார்வ வேள்வியாக தொடங்கிய இந்தப் போராட்டத்தின் தலைவர் யாரென்று விளம்பரப்படுத்தப்படவில்லை, ஒருங்கிணைப்பாளர் என எவரது பெயரும் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
அரசியல் கட்சி தலைவர்கள் யாருக்கும் இந்த போராட்டக் குழுவினர் வரவேற்பு அளிக்கவில்லை. தன்னார்வலர்களாக வந்த நடிகர் ராகவா லாரன்ஸ் போன்றோரின் சிறிய நிதி பங்களிப்பாலும், இன்னும்பிற துறைகளை சேர்ந்த பிரமுகர்களின் ஆதரவாலும் ஒடுக்கப்பட்ட தமிழர்களின் கொந்தளிக்கும் இனஉணர்வுகளின் எழுச்சிப் போராட்டமாக, மகாத்மா காந்தி காட்டித்தந்த சத்தியாகிரகம் என்ற அறவழியில் - மிகவும் அமைதியான முறையில் - நடைபெற்றுவரும் இந்த ‘உரிமை வேள்வி’ தற்போது உலக நாடுகளின் கவனத்தை நம்மவர்களை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
உலகத்தின் பல்வேறு நாடுகளில் பல்வேறு அடக்குமுறைக்கு எதிராகவும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் தினந்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இவற்றில் சில வெற்றியை தழுவுகின்றன. பல கோரிக்கைகள் அடுத்தகட்ட போராட்டக் களத்துக்கான பாதையை ஏற்படுத்தி தருகின்றன. இன்னும் சில போராட்டக் களங்கள் வன்முறைக் களங்களாக மாறி, தடியடி, கண்ணீர்புகை பிரயோகம், துப்பாக்கிச் சூடு, வாகனங்கள் எரிப்பு என உயிர்பலிகளில் சென்று முடிந்துள்ளன.
ஆனால், மதுரை அலங்காநல்லூரிலும், சென்னை மெரினா கடற்கரையிலும் மாநிலத்தின் பிறபகுதிகளிலும் சுமார் 120 மணிநேரமாக வெயிலிலும் பனியிலும் மழையிலும் தொடர்ந்து நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டமானது, ஒரு சிறிய சலசலப்புக்கு கூட பாதை வகுக்காமல், இழந்த கலாச்சார பெருமையை மீட்டெடுக்கும் கடமையை முன்வைத்து, இரவு நேரங்களில் இளம்பெண்களும் பங்கேற்கும் வகையில் கண்ணியத்தை கடைபிடித்து, வன்முறை சம்பவங்களுக்கு துளியளவும் இடமளிக்காமல் கட்டுப்பாடான வகையிலும் கட்டுக்கோப்பான முறையிலும் நடைபெற்று வருவதை கண்டு உலக நாடுகள் மூக்கின்மேல் விரலை வைத்தபடி நம்மை ஆச்சரியத்துடன் இன்று உற்றுநோக்குகின்றன.
தமிழன் என்று சொல்லவும் - மீண்டும் தலைநிமிர்ந்து நிற்கவும் வழிகாட்டிய ஜல்லிக்கட்டு போராளிகளுக்கு நன்றி!