இந்தியா
பாராளுமன்றம் அருகே ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி
- தற்கொலைக்கு முயன்ற நபர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஜிதேந்தர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
- எதற்காக அவர் தற்கொலைக்கு முயன்றார் என்பதற்கான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
டெல்லியில் உள்ள பாராளுமன்றத்திற்கு அருகே ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்றம் அருகே தீ வைத்து கொண்டவரை காப்பாற்றிய போலீசார் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஜிதேந்தர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் எதற்காக அவர் பாராளுமன்றம் அருகே தற்கொலைக்கு முயன்றார் என்பதற்கான தகவல் இன்னும் வெளியாகவில்லை.