பெங்களூரில் பாஜக எம்.எல்.ஏ. மீது முட்டை வீச்சு - அதிர்ச்சி வீடியோ
- பாஜக எம்.எல்.ஏ.மீது முட்டை வீசப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
- இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பெங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா வந்திருந்தார். அப்போது அங்கிருந்த சில மர்ம நபர்கள் எம்.எல்.ஏ மீது முட்டைகளை வீசியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முனிரத்னா மீது முட்டை வீசப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய எம்.எல்.ஏ. முனிரத்னா, "இது ஒரு கொலை முயற்சி. கிட்டத்தட்ட 150 பேர் என்னை கொலை செய்ய வந்திருந்தனர். எனது ஆதரவாளர்களும் போலீஸ்காரர்களும் இல்லையென்றால் இந்நேரம் என்னை கொலை செய்திருப்பார்கள். இந்த விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர் டீ.கே. சிவகுமார் மற்றும் அவரது சகோதரர் டீ.கே. சுரேஷ் சம்பவந்தப்பட்டுள்ளனர்" என்று குற்றம் சாட்டினார்.