உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு- 24 பேர் படுகாயம்
- பள்ளத்தாக்கில் இருந்து மக்கள் கயிறுகள் மூலம் வெளியேற்றப்படுகின்றனர்.
- ஹல்த்வானியில் இருந்து விபத்து நடந்த இடத்திற்கு பதினைந்து ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலம் பீம்டல் அருகே பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 24க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
அல்மோராவில் இருந்து ஹல்த்வானி பகுதியை நோக்கிச் சென்ற பேருந்து உத்தரகாண்ட் மாநிலம் பிம்தால் நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்து 1500 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
போலீசார், SDRF குழுக்கள், தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பள்ளத்தாக்கில் இருந்து மக்கள் கயிறுகள் மூலம் வெளியேற்றப்படுகின்றனர்.
ஹல்த்வானியில் இருந்து விபத்து நடந்த இடத்திற்கு பதினைந்து ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
4 பேர் உயிரிழந்த நிலையில், 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.