6 பேரை திருமணம் செய்து 7 வது திருமணத்தில் சிக்கிய மோசடி ராணி.. ஆசை வலையில் சிக்கிய சிங்கிள்கள்
- பூனம் மணமகளாகவும், சஞ்சனா குப்தா அவரது தாயாகவும் நடிப்பார்கள்.
- நான் திருமணம் செய்ய மறுத்தபோது, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவதாகவும், பொய் வழக்குகளில் சிக்க வைப்போம் மிரட்டினர்
உத்தரப்பிரதேச மாநிலம் பண்டாவில் திருமணமாகாத ஆண்களை ஏமாற்றி, அவர்களது வீடுகளில் இருந்த பணம் மற்றும் நகைகளைத் திருடும் மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் அடங்கிய மோசடி கும்பல் பிடிபட்டுள்ளது.
பூனம், சஞ்சனா குப்தா,விமலேஷ் வர்மா, தர்மேந்திர பிரஜாபதி உள்ளிட்டோரை உள்ளடக்கியது இந்த கும்பல்.
பூனம் மணமகளாகவும், சஞ்சனா குப்தா அவரது தாயாகவும் நடிப்பார்கள். விமலேஷ் வர்மா மற்றும் தர்மேந்திர பிரஜாபதி ஆகிய இருவர் ஏமாறக்கூடிய ஆட்களை தேடிப்பிடித்து பூனத்திற்கு அறிமுகப்படுத்தி வைப்பார்கள்.
சிம்பிளாக கோர்ட்டில் வைத்து திருமணத்தை முடித்து பூனம் மணமகன் வீட்டுக்கு புது மருமகளாக செல்வார். சந்தர்ப்பம் பார்த்து, வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு தப்பிச் சென்று விடுவார். சங்கர் உபாத்தியாய் என்ற நபர் தான் மோசடி செய்யப்படுவதை யோகித்து போலீசில் அளித்த புகாரின் பேரில் இந்த கும்பல் சிக்கியுள்ளது. சங்கருக்கு முன்பே 6 பேரிடம் இந்த கும்பல் வெற்றிகரமாக வேலையை காட்டி உள்ளது.
சிங்கிளாக இருக்கும் சங்கர் திருமணத்துக்கு வரன் தேடியுள்ளார். இதையறிந்து விமலேஷ் சங்கரை அணுகி பெண் இருப்பதாகவும் திருமணத்துக்கு ரூ.1.5 லட்சம் செலவழிக்க வேண்டும் என்றும் சங்கரிடம் கூறியுள்ளார். கடந்த சனிக்கிழமை சங்கரை கோர்ட்டுக்கு அழைத்து பூனம் உடன் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அப்போது அவரிடம் ரூ.1.5 லட்சம் கேட்டுள்ளனர். சந்தேகமடைந்த சங்கர் மணமகள் பூனம் மற்றும் அவரது தாயராக நடித்த சஞ்சனா குப்தாவிடம் ஆதார் அட்டையை கேட்டுள்ளார். ஆனால் சங்கரிடம் இந்த கும்பல் மழுப்பியுள்ளது. அவர்கள் என்னை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்று நான் சந்தேகப்பட்டேன்.
நான் திருமணம் செய்ய மறுத்தபோது, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவதாகவும், பொய் வழக்குகளில் சிக்க வைப்போம் என்றும் மிரட்டினர். நான் யோசிக்க நேரம் வேண்டும் என்று கூறிவிட்டு வெளியேறினேன் என்று சங்கர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
புகரைத் தொடர்ந்து கும்பலை சேர்ந்த நான்கு பேரையும் போலீஸ் கைது செய்தது. சிங்கிளாக இருக்கும் ஆண்களை குறிவைத்து அவர்கள் நடத்திய மோசடிகள் விசாரணையில் ஒவ்வொன்றாக வெளிவந்தன.