கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி வெளியிட்ட AI வீடியோ வைரல்
- ராஜீவ்காந்தியுடன் அவருடைய மகனான ராகுல்காந்தி அமர்ந்து இருப்பது போன்ற ஏஐ புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
- இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
உலகம் நவீனமயமாக்கலில் வீறுநடை போடுகிறது. புதிய புதிய தொழில்நுட்ப வசதிகள் அறிமுகமாகி வருகின்றன. இதில் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைவரையும் வியக்க வைக்கிறது.
தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் இங்கிலாந்து ராணி எலிசபெத், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சட்டமேதை அம்பேத்கர், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், தொழில் அதிபர் ரத்தன் டாடா, மற்றும் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியுடன் அவருடைய மகனான ராகுல்காந்தி அமர்ந்து இருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆம் ஆத்மி கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து இருப்பது போல ஒரு ஏஐ வீடியோவை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், கெஜ்ரிவால் பெண்களுக்கு இலவச பயணச்சீட்டு, இலவச மின்சாரம் உள்ளிட்ட பல பரிசுகளை வழங்குகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.