செய்திகள்
அன்புமணி ராமதாஸ் நாளை வீடு திரும்புகிறார்
பெங்களூர் மருத்துவமனையில் சோர்வு மற்றும் லேசான தலைச்சுற்றல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் இன்று ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு நாளை இல்லம் திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், நேற்று காலை தருமபுரி தொகுதியில் 15-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவருக்கு சோர்வும், லேசான தலைச்சுற்றலும் ஏற்பட்டது.
இதையடுத்து பெங்களூரிலுள்ள நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லையென்பதும், உடல்நிலை இயல்பாக இருப்பதும் தெரியவந்தது. அவருக்கு ஓய்வு தேவை என்பதால் ஒரு நாள் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதன்படி இன்று ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு நாளை இல்லம் திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கண்ட தகவலை பா.ம.க. தலைமை நிலையம் தெரிவித்துள்ளது.