செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Published On 2017-03-12 03:03 GMT   |   Update On 2017-03-12 03:03 GMT
சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை:

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி, முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய வாழ்த்து கடிதத்தின் விவரம் வருமாறு:-

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவின்படி, உங்கள் கட்சி மிகப்பெரிய புகழ்மிக்க வெற்றியை பெற்றதற்காக உங்களுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த வெற்றி, உங்களின் கடினமான உழைப்புக்கும், உங்களின் வல்லமை மிக்க தலைமைத்துவத்துக்கும் ஒரு சான்றாக இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



மேலும், பிரதமர் நரேந்திர மோடியை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்புகொண்டு, நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில், அமோக வெற்றி பெற்றதற்கு தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News