செய்திகள்

கூலி வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

Published On 2017-04-04 15:15 IST   |   Update On 2017-04-04 15:15:00 IST
திருவள்ளூர் மாவட்டத்தில் கூலி வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் 53 ஊராட்சிகள் உள்ளது. இதில் செங்கரை ஊராட்சியில் சுமார் 300 பேருக்கு மத்திய அரசின் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் பணியாற்றிவர்களுக்கு கூலி வாங்க கடந்த மூன்று மாதமாக நிதி ஒதுக்க வில்லையாம். வேலை செய்ததற்கு கூலி கொடுக்கவில்லை என்றும், வேலை செய்ய பணி ஆணை வழங்க மறுத்ததாக 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பெரியபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம மக்களை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணி சந்தித்து மூன்று மாத கூலி கிடைக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாகவும் 2 நாட்களில் கூலியை பெற்றுக் கொள்ளலாம் என்று உறுதி கூறினார்.

அப்போது, கிராம மக்கள் கூறுகையில், நாங்கள் வந்துள்ளதை அறிந்து காலையில் இருந்து அலுவலகம் வராத வட்டாட்சி வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) தங்கள் பகுதிக்கு வரும் போது சிறை பிடிப்போம் என்றும், 2 நாட்களில் கூலி கிடைக்காத பட்சத்தில் திருவள்ளூரில் உள்ள திட்ட அலுவலரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி கலைந்து சென்றனர்.

Similar News