செய்திகள்
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
திருவாடானையில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தாசில்தார் அலுவகத்தில் மனு கொடுத்தனர்.
தொண்டி:
உச்ச நீதி மன்ற உத்தரவின் படி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 3 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அதற்கு பதிலாக ஓரியூர் சாலையில் பண்ண வயல் சமத்துவபுரம் அருகே திறக்கப்போவதாக தகவல் பரவியதைத்தொடர்ந்து பண்ணவயல் கிராமத்தைச்சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்களும் திரண்டு இவ்விடத்தில் மட்டுமல்லாமல் இனி எங்கும் திறக்கப்படக்கூடாது என திருவாடானையில் உள்ள தாசில்தார் அலுவலகத்திலும், டி.எஸ்.பி அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து சாலை மறியல் செய்ய முற்பட்டனர். அதிகாரிகள் அங்கு கடை வரப்போவதில்லை என உறுதியளித்த பின்னர் கலைந்து சென்றனர்.
தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி ஆகிய தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டதால் பொது மக்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு இனி கடைகள் திறக்கப்படக் கூடாது என அரசுக்கு கோரிக்கை விடுத்தும் உள்ளனர்.