செய்திகள்

தனியார் பால் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published On 2017-05-31 13:22 IST   |   Update On 2017-05-31 13:22:00 IST
புனே பரிசோதனை மையத்துக்கு தனியார் பால் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தனியார் பால் மாதிரிகள் புனேயில் உள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்த பிறகு தமிழக அரசின் நடவடிக்கை இருக்கும்.

தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்பட்டது ஆய்வில் தெரிய வந்தால் அந்த நிறுவனத்தின் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News