செய்திகள்
சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் டிரைவர் தற்கொலை
சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
கோவை பெரியகடை வீதி அருகே உள்ள நாடார் வீதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 25).டிரைவர். இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு 1 மகள் உள்ளார். ராம்குமார் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்தார்.
இந்நிலையில் வாடகை வீட்டில் வசித்து வந்த ராம்குமார் சொந்தமாக வீடு வாங்க நினைத்து இருந்தார். ஆனால் போதிய வருமானம் இல்லாததால் வீடு வாங்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ராம்குமரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே ராம்குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெரியகடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.