செய்திகள்

மனைவி இறந்த துக்கத்தில் நாதஸ்வர வித்வான் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2017-05-31 16:00 IST   |   Update On 2017-05-31 16:00:00 IST
கோவையில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் நாதஸ்வர வித்வான் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இருகூர்:

கோவை கருமத்தம்பட்டி சென்னிஆண்டவர் கோவில் குடியிருப்பை சேர்ந்தவர் கணேசன் (வயது 63). நாதஸ்வர வித்வான்.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். மனைவி இறந்த நாளில் இருந்து கணேசன் அவரது நினைவாகவே இருந்தார்.

சம்பவத்தன்று மனவேதனையில் வீட்டில் இருந்த கணேசன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவல் கிடைத்ததும் கருமத்தம்பட்டி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட கணேசனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News