செய்திகள்

எண்ணூர்-திருவொற்றியூர் இடையே 4-வது ரெயில் பாதை: மத்திய ரெயில்வே மந்திரி இன்று தொடங்கி வைக்கிறார்

Published On 2017-06-24 08:49 IST   |   Update On 2017-06-24 08:49:00 IST
எண்ணூர்-திருவொற்றியூர் இடையே 4-வது ரெயில் பாதையை மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு இன்று தொடங்கி வைக்கிறார்.
சென்னை:

மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு சென்னையில் இருந்து தெற்கு ரெயில்வேக்குட்பட்ட பகுதிகளுக்கான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார். இதற்காக அவர் இன்று காலை 9 மணிக்கு மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு காலை 10.55 மணிக்கு வருகிறார்.

பிற்பகல் 12 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் நடக்கும் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்கிறார். பிற்பகல் 2 மணிக்கு சரக்கு, சேவை வரி குறித்த கருத்தரங்கில் பங்கு பெற்று பேசுகிறார்.

இதையடுத்து, பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து காணொலி காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலம் பல்வேறு ரெயில்வே திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.



அந்த திட்டங்களின் விவரம் வருமாறு:-

* எண்ணூர்-திருவொற்றியூர் இடையே 4-வது ரெயில் பாதை (7 கிலோ மீட்டர்).

* சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் 2 மின்தூக்கி எந்திரம் (லிப்ட்).

* சென்னை கோட்டத்துக்குட்பட்ட 17 ரெயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. விளக்குகள். (இதில் 2 ரெயில் நிலையங்களில் தனியார் நிறுவனங்கள் சொந்த செலவில் எல்.இ.டி. விளக்குகள் அமைத்துள்ளனர்)

* மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 10 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி மையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கும் அறை.

* பல்லாவரம் ரெயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட முன்பதிவு அலுவலகம்.

* தாம்பரம் ரெயில் நிலையத்தில் புதிய உணவகம்.

* சென்னை கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் 5 இடங்களில் குடிநீர் வினியோகம் செய்யும் எந்திரம்.

* அரக்கோணம் ரெயில் நிலையத்தில் வை-பை வசதி.

சென்னை, மதுரை ரெயில் நிலையம்

* திருச்சி ரெயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட உணவகம்.

* மதுரை ரெயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட உணவகம் மற்றும் குடிநீர் வினியோகம் செய்யும் எந்திரம்.

பிற்பகல் 4.15 மணி முதல் 4.45 மணி வரை சென்னை வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலரிடம் கலந்து பேசுகிறார். அதன்பின்னர், மாலை 6.05 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இரவு 8.05 மணிக்கு மும்பை திரும்புகிறார். 

Similar News