செய்திகள்

மதுரையில் போலி பத்திரம் தயாரித்து 11 சென்ட் நிலம் மோசடி: கணவன்-மனைவி உள்பட 8 பேர் மீது வழக்கு

Published On 2017-06-24 22:37 IST   |   Update On 2017-06-24 22:37:00 IST
மதுரையில் போலி பத்திரம் தயாரித்து அடுத்தவர் நிலத்தை விற்று மோசடி செய்த கணவன்-மனைவி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மதுரை:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மனைவி ஷீலா. இவருக்கு சொந்தமான 11 சென்ட் நிலம் மதுரை பொன்மேனி பகுதியில் உள்ளது.

அதை அடமானமாக வைத்து கணவரின் நண்பரான சம்மட்டிபுரம் மனோகரன் உள்ளிட்ட 8 பேரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கினார். ஒரு மாதம் கழித்து ஷீலா பணத்தை கொடுத்து விட்டு நிலத்தை மீட்டுக்கொண்டார்.

இதற்கிடையே மனோகரன், வால்மீகி தெரு வடிவம்மாள், முடக்குச்சாலை சுப்பிரமணி, எஸ்.எஸ்.காலனி மலைமணி, சம்மட்டிபுரம் பாலு, அவரது மனைவி ஜெயலட்சுமி, பாலுவின் மகன்கள் அழகு செண்பகபெருமாள், செண்பக பாலகிருஷ்ணன் ஆகிய 8 பேரும் சேர்ந்து ஷீலாவின் நிலத்துக்கு போலி பத்திரம் தயார் செய்து அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்று விட்டனர்.

இதை அறிந்த ஷீலா மதுரை மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கணவன்-மனைவி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News