செய்திகள்
முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் படத்துடன் கோவையில் பறக்கவிடப்பட்டுள்ள பலூன்

கோர்ட்டு தடையால் புதுயுக்தி: கோவையில் ராட்சத பலூனில் அ.தி.மு.க.வினர் விளம்பரம்

Published On 2017-11-01 12:36 IST   |   Update On 2017-11-01 12:36:00 IST
உயிரோடு இருப்பவர்களின் படத்தை வைக்க கோர்ட்டு தடை விதித்துள்ள நிலையில் கோவையில் அ.தி.மு.க.வினர் ராட்சத பலூனில் விளம்பரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை:

டிஜிட்டல் போர்டுகளில் உயிரோடு இருப்பவர்களின் படத்தை வைக்க கோர்ட்டு தடை விதித்தது.

இந்நிலையில் கோவை காந்திபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை திறந்து வைக்கிறார்.

விழாவில் பங்கேற்பதற்காக கோவைக்கு வருகை தரும் முதல்-அமைச்சரை வரவேற்று காந்திபுரம் மேம்பாலத்தின் அருகே ராட்சத பலூன் பறக்க விடப்பட்டுள்ளது.



அந்த பலூனில் மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது படங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலு மணி, எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோரது உருவப்படம் பதிக்கப்பட்டுள்ள அந்த பிரமாண்ட பலூன் வானில் பறக்க விடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வினரின் இந்த புது யுக்தி பரபரப்பாக பேசப்படுகிறது. அதேநேரம் முதல்-அமைச்சரை வரவேற்று வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டுகளில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது படங்கள் மட்டும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News