செய்திகள்
தேனி அருகே நிலப்பிரச்சினையில் பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
தேனி அருகே நில பிரச்சினையில் பெண்ணை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்னர்.
தேனி:
தேனி அருகே உள்ள அம்பேத்கார் 4-வது தெருவைச் சேர்ந்த தங்கமுத்து மனைவி ஈஸ்வரி (வயது 50). இவர் சொந்தமாக நிலத்தை கிரையம் வாங்கி விவசாயம் செய்து வந்தார். இதில் ஈஸ்வரியின் சகோதரர் நடராஜன் (44) என்பவருக்கும் அவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு அது நிலுவையில் இருந்து வருகிறது.
சம்பவத்தன்று நடராஜன் தனது நண்பரான செல்லப்பாண்டியுடன் ஈஸ்வரியின் தோட்டத்தில் புகுந்து அதை சேதப்படுத்தினார். இதை தட்டிக் கேட்ட ஈஸ்வரியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த அவர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நடராஜன் உள்பட 2 பேரையும் கைது செய்தனர்.