செய்திகள்
திருவெண்ணைநல்லூர் அருகே 9-ம் வகுப்பு மாணவன் மாயம்
திருவெண்ணைநல்லூர் அருகே உறவினர் வீட்டில் தங்கி படித்த 9-ம் வகுப்பு மாணவன் மாயமானது குறித்து பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவெண்ணைநல்லூர்:
திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள வடமலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் மூர்த்தி (வயது 14). இவர் சென்னை திருநின்றவூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் பள்ளி விடுமுறைக்கு சென்னையில் இருந்து வடமலையனூருக்கு மூர்த்தி வந்தான். பின்னர் விடுமுறை முடிந்து சென்னைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியே சென்றான். ஆனால் அவன் சென்னையில் தங்கியிருந்த உறவினர் வீட்டுக்கும் செல்லவில்லை. பள்ளிக்கும் செல்லவில்லை.
இது குறித்து வடமலையனூரில் இருக்கும் மூர்த்தியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர்கள் பல இடங்களில் மூர்த்தியை தேடினர். எங்கும் அவன் இல்லை.
இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் மூர்த்தியின் தந்தை முத்து புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவன் மூர்த்தியை தேடிவருகின்றனர்.