செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க காலஅவகாசம் நீட்டிப்பு

Published On 2017-11-01 17:37 IST   |   Update On 2017-11-01 17:37:00 IST
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த, நீக்குவதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட பகுதிக்கான வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் 30.11.2017 தேதி வரை வழங்கலாம்.

நவம்பர் மாதத்தில் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் அவர்களுக்குரிய பகுதியில் ஒவ்வொரு வீடாக சென்று வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள நபர்களிடம், சேர்த்தல் படிவம் 6, நிரந்தரமாக குடியிருப்பு மாறி சென்றவர்கள், இறப்பு இனங்கள் ஆகியவற்றிற்கு படிவம் 7, திருத்தங்கள் மேற்கொள்ளுவதற்கு படிவம் 8, தொகுதிக்குள் முகவரி மாற்றம் தொடர்பான படிவம் 8 ஏ ஆகியவற்றையும் மற்றும் 01.01.2019 தேதியினை தகுதி நாளாக கொண்டவர்களின் விவரங்களையும், குடும்பத்தினரின் செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவைகளையும் சேகரிப்பார்கள்.

எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News