செய்திகள்
தேனி அருகே விவசாயியிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டல்
தேனி அருகே விவசாயியிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் பாண்டி. சக்திவேல், பாண்டியிடம் விவசாயம் செய்வதற்காக கடன் பெற்றுள்ளார். பல்வேறு தவணைகளில் சக்திவேல் கடன் செலுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று கடன் தொகைக்கான புரோ நோட், பத்திரம் ஆகியவற்றை கேட்டபோது பாண்டி கொடுத்த தொகை முழுவதும் வட்டிக்கே சரியாகி விட்டது. அசலை தருமாறு சக்திவேலை மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சக்திவேல், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார். அதன்பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.