செய்திகள்

தேர்தல் பாதுகாப்புக்கு 10 கம்பெனி துணை ராணுவம் வருகிறது

Published On 2017-11-30 14:08 IST   |   Update On 2017-11-30 14:08:00 IST
ஆர்.கே.நகர் தேர்தல் பாதுகாப்பில் ஈடுபடுவதற்காக 10 கம்பெனி துணை ராணுவ படையினர் விரைவில் வர உள்ளனர்.
சென்னை:

ஆர்.கே.நகர் தேர்தல் பாதுகாப்பில் ஈடுபடுவதற்காக 10 கம்பெனி துணை ராணுவ படையினர் விரைவில் வர உள்ளனர்.

பணப்பட்டுவாடா மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முக்கிய சந்திப்புகளில் இவர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட உள்ளனர்.

துணை ராணுவ படையினர் வரும் வரையில் உள்ளூர் போலீசார் பறக்கும் படையில் இடம் பெற்றிருப்பார்கள்.

முதல் கட்டமாக 10 கம்பெனி துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட உள்ளதாகவும், தேவைப்பட்டால் கூடுதலாக துணை ராணுவ படை கேட்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் சந்கேத்துக்கிடமான வகையில் வெளியாட்கள் தங்குவதை தடுப்பதற்கும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்காக திருமண மண்டபங்கள், பணிகள் முடிந்து திறக்கப்படாமல் இருக்கும் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் ஆகியவற்றை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரத்து 200 இரு சக்கர வாகனங்களும், சுமார் 5 ஆயிரம் 4 சக்கர வாகனங்களும் உள்ளன.

இந்த வாகனங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

Similar News