செய்திகள்

புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்கள் 55 பேர் தேர்வில் தோல்வி

Published On 2018-02-06 15:40 IST   |   Update On 2018-02-06 15:40:00 IST
புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் 55 மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். மேலும் செய்முறை தேர்வில் குறைந்த மதிப்பெண் அளித்ததாக புகார் தெரிவித்தனர்.
புதுச்சேரி:

புதுவை கதிர்காமத்தில் அரசு மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆண்டுதோறும் சென்டாக் மூலம் 150 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு சேர்க்கப்படுகிறார்கள்.

இந்த ஆண்டு பல்கலைக்கழக தேர்வு சமீபத்தில் நடந்தது. இதில் இறுதி ஆண்டு படிக்கும் 130 மாணவர்களில் 75 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதம் உள்ள 55 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். மாணவர்கள் தோல்விக்கு செய்முறை தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படாததே காரணம் என கூறப்படுகிறது.

தோல்வி அடைந்த மாணவர்கள் கல்லூரி இயக்குனர் கோவிந்தராஜை சந்தித்து பேசினர். அப்போது செய்முறை தேர்வில் கல்லூரி பேராசிரியர்கள் தங்களுக்கு உரிய மதிப்பெண் வழங்கவில்லை. ஆனால் பல்கலைக்கழகம் நடத்திய எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளோம் என புகார் தெரிவித்தனர்.

Similar News