செய்திகள்
மதுரை அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு
தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகையை பறித்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை புட்டுத்தோப்பு செக்கடித்தெருவைச் சேர்ந்தவர் ஜெகதாம்பிகா (வயது 89). இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் அங்கு வந்தார். அவர், குடிக்க தண்ணீர் வேண்டுமென ஜெகதாம்பிகாவிடம் கேட்டார். அவருக்கு தண்ணீர் கொடுக்க முயன்றபோது ஜெகதாம்பிகா கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு அந்த பெண் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டார்.
இதுகுறித்து கரிமேடு போலீசில் மூதாட்டியின் மகன் ரவிச்சந்திரன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகையை பறித்துச் சென்ற இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.