செய்திகள்
ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதி சென்னை இளம்பெண் பலி
ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த மாதனூர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்னை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
மாதனூர் அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ரிப்பேர் ஆகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது.
இதில் கார் முன் பக்கம் நொறுங்கியது. காரில் இருந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசாரின் விசாரணையில் அவர் சென்னை திருவெற்றியூரை சேர்ந்த ரூபாஷினி (வயது22) என்பது தெரியவந்தது. இவர் சென்னையில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ஆம்பூர் டவுன் போலீசார் இளம்பெண் உடலை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கார் ஓட்டிவந்தது உடன் வேலை பார்த்து வந்த பசுபதி சென்னை மறைமலைநகரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews